Breaking News

ராயல்ஓக் பர்னிச்சரின் 2வது புதிய ஸ்டோர் திறப்பு..!



கோவை சரவணம்பட்டியில் ராயல் ஓக் பர்னிச்சரின் 2வது புதிய ஸ்டோர் திறக்கப்பட்டது.இவ்விழாவில் ராயல்ஓக் இன்கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் விஜய் சுப்ரமணியம், மேலாண்மை இயக்குநர் மதன் சுப்ரமணியம்,இயக்குநர் மகேஷ்வரி விஜய்,இயக்குநர் பிரீதி மதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ராயல்ஓக் பிரான்சைஸி தலைவர் கிரண் சாப்ரியா, தம்மைய்யா கோடேரா, பிராந்திய பிரான்சைஸி தலைவர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர். வெற்றிகரமான இந்த வணிக விரிவாக்கம், கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ராயல்ஓக் உருவாக்கிய பரந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளது. 



10,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த கடையில் லிவிங் ரூம், பெட்ரூம், டைனிங் பகுதி, படிப்பு மற்றும் அலுவலகம், வெளிப்பகுதி,வீட்டு அலங்காரங்கள், மெத்தைகள் என பல்வேறு பரந்த மற்றும் சிறப்பாக ஃபர்னிச்சர் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. தொடக்க விழா சிறப்பு சலுகையாக, ராயல்ஒக் கோயம்புத்தூர் கடை, குறிப்பிட்ட கொள்முதல் மதிப்புகளுக்கான வாடிக்கையாளர் களுக்கு ரூ.17,500 வரை மதிப்புடைய ரீகிளைனர் மற்றும் ரூ.7,500 வரை மதிப்புடைய வீட்டு அலங்காரப் பொருட்களை இலவசமாக வழங்குகிறது.

No comments

Thank you for your comments