Breaking News

ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் டி .ஆர். பாலு எம்பி, அமைச்சர் காந்தி பங்கேற்பு

காஞ்சிபுரம் ஏப் 6:   

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் / திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் .டி.ஆர்.பாலு  தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி   முன்னிலையில் நடைபெற்றது.


இக்குழுவானது ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்பு துறை, மக்கள் நல்வாழ்வு துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வருவாய் துறை, கல்வித் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சாரத் துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் விதிமுறைகளுக்குட்பட்டு நடைபெறுகின்றதா என்பதை ஆய்வு செய்ததுடன் பல்வேறு துறைகள் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பணிகளை உரிய காலத்தில் முடிக்க தெரிவிக்கப்பட்டது. 

மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காரீப் பருவம் மற்றும் சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீட்டு பதிவு செய்த விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், சிறப்பு பருவத்தில் இழப்பீட்டு தொகை வழங்கிய விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்பு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.16500/- மானியம் வழங்கப்படுகிறது, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மக்களுடன் முதல்வர் போன்ற முகாம்களில் திரைப்பட விளக்க காட்சிகள்  பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விவசாய இடுப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளதா போன்ற விவரங்களையும் கேட்டறிந்ததில், விவசாய இடுப்பெருட்களால் பூச்சிகளின் தாக்கம் குறைந்துள்ளதாக இணை இயக்குநர் (வேளாண்மை) தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள்  திட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டு இலக்கு பற்றி தெரிவிக்கையில், மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள தனிப்பட்ட விவசாயிகள் பயன்பெறும் திட்டமாகும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், சிறு,குறு விவசாயிகளுக்கு 80% மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 60% மானியத்திலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், திட்ட மதிப்பீடு: ரூ.3,16,000/- ஆகும் ஆரம்ப முதல் சுமார் ரூ.1 இலட்சம் வரை செலவாகும் என்பதால் விவசாயிகள் தயக்கம் காட்டுவதாக செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்ததுடன், பெரும்பாலான விவசாயிகள் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும்  தெரிவிக்கப்பட்டது. 

 இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு இணை தலைவரும், காஞ்சிபுரம் தொகுதி எம்பி .க.செல்வம், கலெக்டர்  கலைச்செல்வி மோகன், உத்திரமேரூர் எம்எல்ஏ.க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல்.எழிலரசன், திருப்பெரும்புதூர் தொகுதி எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, தாம்பரம் எம் எல் ஏ எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட  காவல்  போலீஸ் எஸ் பி கி.சண்முகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், 

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, சார் கலெக்டர் ஆஷிக் அலி, உதவி கலெக்டர் (பயிற்சி) மிருணாளினி, 

காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகர், திருப்பெரும்புதூர் ஒன்றியக் குழுத்தலைவர், கருணாநிதி,  குன்றத்தூர் ஒன்றியக் குழுத்தலைவர்  சரஸ்வதி மனோகரன் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், DISHA  குழு உறுப்பினர்கள், அனைத்து  துறை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments