காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா - அமைச்சர் காந்தி பங்கேற்பு
அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர்-எம்.எல்.ஏ சுந்தர் தலைமையில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார் ஏற்பாட்டில் பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி சத்திரம் அருகே தண்ணீர்-மோர் பந்தல் திறப்பு விழாவில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர்,கிரிணி பழம், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்,மாநகர திமுக செயலாளர் சிகேவி தமிழ்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட் ஆறுமுகம்,மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார்,பகுதி செயலாளர் திலகர், ஒன்றிய செயலாளர்கள் குமணன், ஞனசேகரன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ் ராமகிருஷ்ணன், மாநகர துணை செயலாளர்கள் முத்துசெல்வம், ஜெகந்நாதன், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, இளஞ்செழியன்,பி.என்.ரவி,ராம்பிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments