Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் - எம் பி, எம் எல் ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், ஏப் 6: 

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மாவட்ட இளைஞரணி சார்பில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ. யுவராஜ் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வரவேற்று பேசினார். 


பகுதி செயலாளர் கே. சந்துரு, திலகர், வெங்கடேசன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்ற குளிர்பானங்கள்  வழங்கினார். 

இதில் மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் ஏழிலரசன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி சிறுவடல் க. செல்வம், காஞ்சிபுரம் மகாலட்சுமி யுவராஜ்,  மாவட்ட பொருளாளர் சன்பிராண்ட ஆறுமுகம்,  தலைமைக் கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன்,ஒன்றிய செயலாளர் பி எம் குமார் ,பி எம் பாபு, 

மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன் ,முத்து செல்வம், ஜெகநாதன், மண்டல தலைவர் செவிலிமேடு மோகன், நிர்மலா,  மாவட்ட இளைஞரணி துனை அமைப்பாளர் சஞ்சய் காந்த் ,மாநகர இளைஞரணி சுகுமார், தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் இளம்பரிதி,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ராம் பிரசாத், தமிழ்ச்செல்வன், பி எம் நீலகண்டன் உள்ளிட்ட கலந்து கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments