பாஜக அரசைக் கண்டித்து இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி ரோடு தேரடி அருகேயுள்ள சுன்னத் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல் என்னும் ஷேக் கைருல்லாஹ் மஸ்ஜித் ஜமாத் சார்பாக 11/04/2025 இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு காஞ்சிபுரம் தேரடி பள்ளிவாசல் வெளியே மஸ்ஜித் தலைவர் அப்துல் குத்தூஸ் தலைமையில் மாபெரும் கண்டனம் முழக்க கூட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன முழக்க கூட்டத்தில் மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி முஹம்மத் காலித் காஷிபி அவர்கள் கண்டனம் முழக்கமிட்டார்கள், உடன் சின்ன காஞ்சிபுரம் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் 300க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்
No comments
Thank you for your comments