Breaking News

புரட்சி பாரதம் கட்சி சார்பில் சத்தீயசீலன் தலைமையில் நீர்மோர் பந்தல் – மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி. தனசேகரன் திறந்து வைப்பு

 காஞ்சிபுரம் : 

காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகே புரட்சி பாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் குட்டி(எ) சத்தீயசீலன் தலைமையில்  பொதுமக்களின் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சி.தனசேகரன் திறந்து வைத்தார்.

புரட்சிபாரதம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் பூவை எம்.மூர்த்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலத்தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தியார் அவர்களின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே புரட்சிபாரதம் கட்சியின் காஞ்சிபுரம் மாநகர செயலாளர் குட்டி(எ)சத்தீயசீலன் தலைமையில்  பிரமாண்டமாக அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சி.தனசேகரன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், குளிர்பானங்கள், பழரசம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தலித் மு.அன்னக்கிளி, காஞ்சி மாநகர இணை செயலாளர் சி.நாகராஜ், காஞ்சி ஒன்றிய செயலாளர் கொ.பவனஅரசன், வாலாஜாபாத் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.கே.ரமேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் விஷார் பிரபு, மாவட்ட து¬ண்ச்செயலாளர் கூரம்செல்வம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எஸ்.பாலு, காஞ்சி ஒன்றிய சிறுபான்மைப்பிரிவு செயலாளர் உ.ரூஜினேஸ்வரன், கூத்திரபாக்கம்வேதா மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். 



No comments

Thank you for your comments