ஐபிஎல் ஸ்டைலில் பசுமை டாட்டுகள்–ஒவ்வொரு டாட் பாலுக்கும் ஒரு மரக்கன்று! -மரம் நடவு விழிப்புணர்வில் அசத்தும் கிராமப்புற இளைஞர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகேயுள்ள வல்லப்பாக்கத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு Green Belt Revolution அமைப்பின் சார்பில் இரண்டாவது ஆண்டு கிரிக்கெட் போட்டி விழா சிறப்பாக ஆரம்பமாகியது.



விழாவின் தொடக்க நிகழ்வாக கிரிக்கெட் விரர்கள் ஒன்றினைந்து போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்து மரம் நடுவது குறித்த விழிப்புணர்வை அனைவரிடத்திலும் ஏற்படுத்தினர்.

குறிப்பாக ஐபிஎல் மாதிரியாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஒவ்வொரு டாட் பால் (ரன் எடுக்காத பந்து)க்கும் ஒரு மரக்கன்று நடப்படும் என்ற முறையில் பசுமையை பரப்பும் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது!

இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் போட்டி, வல்லப்பாக்கம் இளைஞர்களின் ஒற்றுமையையும், பசுமைபடுத்தும் விழிப்புணர்வையும் வெளிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments