Breaking News

தியாக உணர்வு இருப்பவர்கள் தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்க முடியும்-அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு

காஞ்சிபுரம்,ஏப்.18:

தியாக உணர்வும்,சேவை மனப்பான்மையும் உள்ளவர்கள் தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்க முடியும் என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் வித்யபிரகாசம் அறிவுசார் குறைபாடு குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியின் 23 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு எம்எல்ஏ எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழுவின்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளியின் சிறப்பு செயலாளர் ஏ.கே.மணிமேகலை வரவேற்று பேசினார். விழாவில் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அவரது சொந்த நிதியிலிருந்து மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், அவர்களது ஆசிரியர்களுக்கும் சீருடைகளை வழங்கி பேசியது..

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள் கடவுளுக்கு நிகராவனவர்கள்.ஏனெனில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதுகாப்பதும், பராமரிப்பும் மிகவும் கடினமான செயலாகும்.தியாக உணர்வும், சேவை மனப்பான்மையும் உடையவர்கள் தான் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆசிரியர்களாக இருக்க முடியும். 

இது ஒரு முடியாத செயல் என்றும் சொல்லலாம். கோயிலுக்கு செல்வதை விட மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு செய்யும் உதவிகளே மேலானது. மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ராணிப்பேட்டையில் விசுவாசம் என்ற அமைப்பை கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும் பேசினார்.

நிறைவாக மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) உமாசங்கர் உட்பட அரசு அலுவலர்கள், குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments