முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலை 28ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு
காஞ்சிபுரம், ஏப்ரல் 21:
திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான திரு சி.வி.எம்.பி. எழிலரசன் அவர்களின் பாட்டனார், பேரறிஞர் அண்ணாவால் "செந்தமிழ்ச் செல்வர்" என பெருமிதத்துடன் அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலை அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிறப்பான நினைவஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்தில் சிபிஎம் அண்ணாமலை திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி கவியஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நினைவஞ்சலி நிகழ்வில்,
- மாநகர செயலாளர் சி.கே.வி. தமிழ்ச்செல்வன்
- மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ்
- பகுதிக் கழக செயலாளர்கள் திலகர், சந்துரு, வெங்கடேசன்
- ஒன்றிய குழுத் தலைவர்கள் மலர்கொடி குமார், ஆர்.கே. தேவேந்திரன்
- ஒன்றியச் செயலாளர்கள் பி.எம். குமார், படு நெல்லி பாபு, குமணன்
- மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்
- மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள்
- கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள்
- சி.வி.எம். குடும்பத்தினர் உள்பட ஏராளமான திமுகவினர் பங்கேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வைத் தொடர்ந்து காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. மேலும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பும், பூக்கடை சத்திரம் பகுதியில் ஏழை மற்றும் எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments
Thank you for your comments