Breaking News

காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையத்தில் புதிய 6 பேருந்துகள் இயக்கம் - எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையத்தில், புதிய 6 பேருந்துகள் இயக்கத்தை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 


காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து மதுரை, திருப்பதி, பெங்களூர், தாம்பரம் சித்தாத்தூர் ஆகிய 6 பேருந்துகள் வழித்தடத்திலும் இயக்குவதற்காக, அதி நவீன புதிய ரகப் பேருந்துகள், காஞ்சிபுரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

பழைய பேருந்துகளுக்குப் பதிலாக தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்துகளின் இயக்கத்தை, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பின்னர் 6 பேருந்துகளும் காஞ்சியில் முக்கிய நகர் வீதி வழியாக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திமுக கட்சியினருடன் டிக்கெட் எடுத்து பயணம் செய்து பொதுமக்களிடம் அதி நவீன புதிய பேருந்து சேவை காஞ்சிபுரத்திலிருந்து இயக்கப்படுவதாக தெரிவித்து வந்தார்

1 comment:

Thank you for your comments