காஞ்சிபுரத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம், ஏப்.8:
தமிழக நதிகள் பாதுகாப்பு இயக்கம்,விவசாயிகள் நல இயக்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆகியன சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் நல இயக்கத் தலைவர் எம்.எஸ்.ஆனந்தன் தலைமை வகித்தார்.நதிகள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் மு.மணி, கௌரவ தலைவர் ரா.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் நா.அறவாழி வரவேற்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே எடமச்சி கிராமத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ள புதிய கல்குவாரியை ரத்து செய்ய வலியுறுத்துதல்,அரசு அறிவிப்பு செய்தபடி தென்பெண்ணை, பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனே செயல்படுத்தக் கோருதல், நீர்நிலைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், நெல் கொள்முதல் செய்ய பணம் பெறுபவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் காவிரி.தனபாலன்,இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஆர்.விருத்தகிரி,இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் உட்பட விவசாயிகள்,எடப்பாடி கிராம பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments