Breaking News

அங்கம்பாக்கம் பள்ளியில் மாணவர்களுக்கு மசாலா முருங்கைக்கீரை சூப்

அங்கம்பாக்கம் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், மாணவர்களுக்கு ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.





இதைத் தொடர்ந்து, மருத்துவர், மாணவர்கள் வாரம் இருமுறை முருங்கைக்கீரை சாப்பிட வேண்டும் என்றும், சூப்பாக வைத்தும் சாப்பிடலாம் என்றும் அறிவுரையளித்தார்.



இதனை கருத்தில் கொண்டு,  பள்ளியில் மாணவர்களுக்கு  சூப் வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.   

இதனையடுத்து, அனைத்து மாணவர்களுக்கும் சுவையான மசாலா முருங்கைக்கீரை சூப் வழங்கப்பட்டது.


மாணவர்களின் ஆரோக்கியத்தையும், சத்தான உணவையும் ஊக்குவிக்கும் வகையில், இனி ஒவ்வொரு புதன்கிழமையும், பிற்பகல் 11.00 மணிக்கு  முருங்கைக்கீரை சூப் வழங்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளியின் சத்துணவுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

 

No comments

Thank you for your comments