12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்காக பூமி பூஜை- அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம், ஏப்.18:
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஆட்சியர் அலுவலகம் அருகில் பல்லவன் நகர் பகுதியில் ரூ.60.70 கோடி மதிப்பில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.இரு படுக்கை அறைகள் கொண்ட 48 வீடுகளும், மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் 35 உட்பட மொத்தம் 83 வீடுகள் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் காஞ்சிபுரத்தில் முதல் முதலாக 12 தளங்களுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு கட்டும் பணியை தொடக்கி வைத்தார்.குடியிருப்பு கட்டும் பணி தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் பொறியாளர்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளர் அ.கணேசன் ஆகியோர் உட்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments