புதிய அங்கன்வாடி மையம், பேருந்து பயணிகள் நிழல் கூடம் -எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நட்டு தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்,ஏப்.12:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஓ பி குளம் பள்ளத்தெரு பகுதியில் சேதமடைந்த நிலையில் இருந்த அங்கன்வாடி மையம் கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் கீழ் 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக்கட்டிடம் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஒ.பி.குளம் பள்ள தெரு பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கலந்து கொண்டு அடி கல்லை நட்டு வைத்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி ஒலிமுகமது பேட்டை பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்ட நிதியின் கீழ் 18லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிழல் கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் கலந்துகொண்டு அடி கல்லை நட்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
Post Comment
No comments
Thank you for your comments