வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்.
காஞ்சிபுரம், ஏப்.11-
மத்தியில் ஆளும் ஒன்றிய பாஜக அரசு இஸ்லாமிய அமைப்புகளின் சொத்துக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து அமல்படுத்தி உள்ளது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும்,எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு சார்பில் பெரிய காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் உள்ள பள்ளி வாசல் முன்பு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்த ஒன்றிய. பாஜக அரசை கண்டித்தும் புதிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த 200க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள்,
காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு வட்ட தலைவர் முகமது,ஜமாத் தலைவர் லியாகத் ஷெரிப் சாதிக் ஆகியோர் தலைமையில்
ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி கையில் தேசிய கொடியை பிடித்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக சங்கர மடம் சாலை தெரு பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments