வெயிலில் பயணிக்கும் பொதுமக்களுக்கு பழரசம் மற்றும் தர்பூசணி வழங்கல் நிகழ்வு - காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பான ஏற்பாடு
காஞ்சிபுரம், ஏப்.17:
தலைமை செயற்குழு உறுப்பினர் திரு எம்.எஸ். சுகுமார் அவர்களின் ஏற்பாட்டில் இந்த முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் பழரசங்களை மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் திரு.வி.எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகர உறுப்பினர் திரு. குமரவேல், மாநகர கழக பிரதிநிதிகள் எஸ். மாமல்லன், ஜெ. வரதராஜன், சேகர், தேவராஜ், காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் எஸ். மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் பி.என். ரவி, பழனிவேல், மனோஜ், விஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments