Breaking News

அண்ணல் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள் விழா - காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரியாதை- உறுதிமொழி

காஞ்சிபுரம், ஏப். 14:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக கழகத் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, அண்ணல் அம்பேத்கரின் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இவ்விழா இன்று (14.04.2025) காஞ்சிபுரம் கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. க. சுந்தர் MLA அவர்கள் தலைமையில், அம்பேத்கரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றை உறுதி செய்யும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் திரு. க. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.பி. எழிலரசன், மாநகர திமுக செயலாளர் திரு. சிகேவி தமிழ்செல்வன், மாநகராட்சி மேயர் திருமதி மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் திரு. சண்பிராண்ட் ஆறுமுகம், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு. எம்.எஸ். சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து பகுதி செயலாளர்கள் திரு. திலகர், திரு. சந்துரு, திரு. வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் திரு. பி.எம்.குமார், திரு. பி.எம். பாபு, மாநகர துணை செயலாளர்கள் திரு. ஏ.எஸ். முத்துசெல்வம், திரு. ஜெகன்நாதன் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அ. யுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments