Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நல்வாழ்வுத் துறை சார்பில்பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் திறப்பு

காஞ்சிபுரம்   :

காஞ்சிபுரம் ஒன்றியம், திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி  மற்றும்   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில்  ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9  புதிய  கட்டிடங்களை திறந்து வைத்தனர்.

புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  திறந்து வைத்து தெரிவித்ததாவது: 

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  இதுவரை மொத்தம் ரூ.42.25 கோடி செலவில் பல்வேறு மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் மருத்துவ உபகரணங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.  

ஆகிய மருத்துவ சேவைகள் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அதனை தொடர்ந்து   காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9  மருத்துவமனை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் காஞ்சிபுரம் தொகுதி   திருப்புட்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவு  கட்டிடம், 

மக்கள் பயன்பாட்டிற்காக  திறந்து வைக்கபட்டுள்ளது. 

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.299.88 கோடி செலவில் 29 மருத்துவ கட்டிடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 இதனை தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மருந்து பெட்டகத்தினையும்   கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்  மற்றும்   மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி .க.செல்வம், உத்திரமேரூர் எம் எல் ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல்.எழிலரசன் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை ஆ.மனோகரன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம்  ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன்,  மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார்,  காஞ்சிபுரம்  ஒன்றிய குழு துணைத்தலைவர் திவ்வியப்பிரியா இளமது, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் த.ரா.செந்தில்,  திருப்புட்குழி வட்டார மருத்துவ அலுவலர் அருள்மொழி, ஒன்றிய செயலாளர் பி எம் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம் எஸ் சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் ராம் பிரசாத், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments