நாளைய (01-04-2025) ராசி பலன்கள்
மேஷம் (Mesham)- Aries
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் அமைதியைக் கையாள்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் :
நீல நிறம்
அஸ்வினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம் (Rishabam) -Taurus
மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும்.
ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும்.
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும்.
மற்றவர்கள் பணியை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய
பணிகள் தாமதமாக நிறைவு பெறும். நட்பு மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் :
வெண்சாம்பல் நிறம்
கிருத்திகை : சேமிப்புகள் குறையும்.
ரோகிணி : அனுசரித்துச் செல்லவும்.
மிருகசீரிஷம் : பணிகள் தாமதமாகும்.
மிதுனம் (Mithunam) -Gemini
செல்வச் சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில்
முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும்
சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்
திருவாதிரை : வாய்ப்புகள் உருவாகும்.
புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கடகம் (Kadagam) - Cancer
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த
உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில்
ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை
ஏற்படும். கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள்
ஈடேறும். சிரமம் மறையும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் :
இளஞ்சிவப்பு நிறம்
புனர்பூசம் : உதவி கிடைக்கும்.
பூசம் : ஈடுபாடு உண்டாகும்.
ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.
சிம்மம் (Simmam) -Leo
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அமைதி வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் :
மயில்நீல நிறம்
மகம் : நன்மையான நாள்.
பூரம் : அனுபவம் உண்டாகும்.
உத்திரம் : பயணங்கள் சாதகமாகும்.
கன்னி (Kanni)- Virgo
எண்ணிய செயல்கள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப
உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடை செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
கடன் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள்
மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
விவேகம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் :
வெள்ளை நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அஸ்தம் : செயல்பாடுகளில் கவனம்
சித்திரை : நெருக்கடியான நாள்.
துலாம் (Thulaam)- Libra
கணவன் மனைவிக்கு இடையே விவாதங்கள் தோன்றி மறையும். உடல்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சி
உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள்
கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த
கவலைகள் படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சுவாதி : மகிழ்ச்சியான நாள்.
விசாகம் : கவலைகள் குறையும்.
விருச்சிகம் (Viruchigam) -Scorpio
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள்
உருவாகும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நிலுவையில் இருந்து வந்த
பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.
பாசம் மேம்படும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் :
பிரவுன் நிறம்
விசாகம் : வரவுகள் உண்டாகும்.
அனுஷம் : சந்திப்புகள் உருவாகும்.
கேட்டை : புரிதல் ஏற்படும்.
தனுசு (Dhanusu)- Sagittarius
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் இலக்குகளை நிர்ணயம்
செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். முதலீடு தொடர்பான
விஷயங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மேல்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பகை மறையும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் :
வெள்ளை நிறம்
மூலம் : எண்ணங்கள் கைகூடும்.
பூராடம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : முன்னேற்றமான நாள்.
மகரம் (Magaram)- Capricorn
தொழில் சார்ந்த கல்விகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழில்
நிமித்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய
முதலீடுகளில் ஆய்வு செய்து மேற்கொள்வது நல்லது. சொந்த ஊர் சார்ந்த சிந்தனைகள்
உருவாகும். உறவினர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் புதிய
வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் :
சாம்பல் நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கும்பம் (Kumbam)- Aquarius
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ
அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான
காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள்
சாதகமாகும். உத்தியோக பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்துச் சென்றால்
ஆதாயம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 9
- அதிர்ஷ்ட நிறம் :
ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.
சதயம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.
மீனம் (Meenam) - Pisces
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியம்
தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனம்
வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள்
புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். திடீர் வரவுகள் உண்டாகும்.
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும்.
நிறைவு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் :
வெள்ளை நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : துரிதம் உண்டாகும்.
No comments
Thank you for your comments