கூட்டுறவுப் பாடல் எழுதுவோருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு - காஞ்சிபுரம் இணைப்பதிவாளர் தகவல்
காஞ்சிபுரம், ஏப்.17:
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
சர்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025 ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி கூட்டுறவுத்துறை பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன.
அனுப்பப்படும் பாடலானது இசையமைக்கப்பட்டு 5 நிமிடம் ஒலி பரப்பக்கூடிய வகையில் பாடல்வரிகள் இருந்தால் போதுமானது.
கூட்டுறவுத்துறைக்கான தமிழில் தனித்துவமான பாடலாக இருக்க வேண்டும். கூட்டுறவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூட்டுறவு பற்றிய எழுச்சி,உத்வேகம்,உற்சாகம் உண்டாக்கக்கூடியதாகவும் பாடல் இருக்க வேண்டும். பாடல்களில் சிறந்த பாடல் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும்.
சிறந்த பாடலுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கமும், கேடயமும் பரிசாக வழங்கப்படும். பாடலின் ஒரிஜினல் நகல் தபாலிலோ அல்லது கூரியர் வாயிலாகவோ அனுப்பவேண்டும்
அனுப்பவேண்டிய முகவரி:
மேலாண்மை இயக்குநர்,
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம்,
என்.வி.நடராஜன் மாளிகை,
பெரியார் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை,
கீழப்பாக்கம், சென்னை-6000010
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாடலின் மென் பிரதியை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் rcs.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் வரும் 30-05-2025 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பா.ஜெயஸ்ரீ கேட்டுக்கொண்டார்.
இணையதளம் முகவரி : https://www.rcs.tn.gov.in/Tamil/index.php
.jpg)
No comments
Thank you for your comments