மெட்ரோ ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 20 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் வாலிபர் கைது.
- காஞ்சிபுரத்தில் நீதிபதி என கூறி மெட்ரோ ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 20 லட்சம் மோசடி செய்த வழக்கறிஞர் வாலிபர் கைது.
- பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக புகாரின் பேரில் விஷ்ணு காஞ்சி போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 32 வது வார்டு நாகாலுத்து தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், இவர் பல்வேறு மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்பவராக இருந்து வருகிறார்.
இவரது மகன் அருண் சூர்யா என்பவர் சட்ட படிப்பு படித்துவிட்டு சென்னையில் ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் நீதிபதியாகவும் பணிபுரிவதாக கூறி வீட்டின் வெளியே போர்டையும் மாட்டி வைத்துள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒலிமுகமது பேட்டை பகுதியை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மோகன் ஆண்டுதோறும் ராஜேந்திரன் ஏற்பாடு செய்யும் சுற்றுலாவில்விடுமுறை நாட்களில் குடும்பத்தாருடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.
இதன் மூலம் சுற்றுலா ஏற்பாட்டாளர் ராஜேந்திரனுக்கும் அரசு பேருந்து ஓட்டுநர் மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் ராஜேந்திரன் மூலம் அவரின் மகன் நீதிபதி எனக் கூறிக் கொள்ளும் அருண் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு பேருந்து ஓட்டுநர் மோகனின் மகன் படித்து முடித்து வேலை தேடி வருவதாகவும் அவருக்கு வேலை வேண்டும் என அருண் சூர்யாவிடம் கேட்டுள்ளார்.
அருண் சூர்யா சென்னை மெட்ரோ ரயில்வேயில் தற்போது மேலாளர் பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும் நீதிபதியான தான் சிபாரிசு செய்தால் சுலபமாக வேலை கிடைத்துவிடும் என மோகனிடம் கூறியுள்ளார்.
மேலும் வேலைக்காக 6 லட்ச ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என கூறி அருண் சூர்யா, அரசுப் பேருந்து ஓட்டுனர் மோகனிடம் பணத்தைப் பெற்றுள்ளார்.
பணத்தை பெற்றவுடன் உடனடியாக வேலை கிடைக்கும் என கூறிய நிலையில் சில தினங்களுக்கு முன்பு சென்னையில் வேலைக்காக நேர்காணல் இருப்பதாக இருவரையும் வர சொல்லிவிட்டு,அங்கு அருண் சூர்யா வராமல், உங்களுக்கு பணி ஆர்டர் கிடைத்துவிட்டது என கூறி ஏமாற்றி உள்ளார்.
இந்த நிலையில் அரசுப் பேருந்து ஓட்டுநர் மோகன் கடந்த ஒரு வாரமாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அருண் சூர்யா போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த மோகன், ராஜேந்திரன் வீட்டிற்கு நேரடியாக சென்று, வேலை கிடைக்கவில்லை என்றால் பணத்தை திரும்ப தரும்படி கேட்ட நிலையில் இரண்டு நாட்கள் கழித்து வா என்று சொல்லிவிட்டு ராஜேந்திரனும் தலைமறைவாகி உள்ளார்.
இதையடுத்து தான் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறிந்த அரச பேருந்து ஓட்டுனர் மோகன், இச்சம்பவம் குறித்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று, நீதிபதி என கூறி மெட்ரோவில் வேலை வாங்கித் தருவதாக பணத்தை ஏமாற்றி பெற்றுக் கொண்டதாக அருண் சூர்யா மீது புகார் தெரிவித்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த விஷ்ணு காஞ்சி காவல் நிலைய போலீசார் அருண் சூர்யாவை சென்னையில் தேடிப் பிடித்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி போலீசார் அருண் சூர்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பயிற்சி வழக்கறிஞராக இருந்து கொண்டு நீதிபதி என நாடகம் நடித்துமெட்ரோ ரயில்வேயில்வில் வேலை வாங்கித் தருவதாக 20 லட்சம் வரை ஏமாற்றிய போலி நீதிபதி கைது செய்யப்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments