Breaking News

காஞ்சிபுரம் யாகசாலை நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம், மார்ச்.1:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள யாகசாலை நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தாவதினி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சின்னக்காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள யாகசாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் 119 வது ஆண்டு விழா ஆகியன பள்ளித் தலைமை ஆசிரியர் சுகந்தா வதினி தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் 2 வது மண்டலக்குழுவின் தலைவர் த.சந்துரு,மாநகராட்சி பணிக்குழு உறுப்பினர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.விழாவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஷர்மிளா மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக பள்ளி மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

No comments

Thank you for your comments