காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து அதிமுகவினர் வழிபாடு
காஞ்சிபுரம், மார்ச்.1:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை தங்கத்தேர் இழுத்தும்,அன்னதானம் வழங்கியும் கொண்டாடினார்கள்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா,வி.சோமசுந்தரம் ஆகியோர் தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கத்தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மதனந்தபுரம் பழனி, எம்ஜிஆர் இளைஞர் அணியின் செயலாளர் எஸ்எஸ்ஆர்.சத்யா, மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட துணைச் செயலாளர் போந்தூர்.
செந்தில்ராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.சோமசுந்தரம் ஆகியோர் உட்பட கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தங்கத்தேர் நிலைக்கு வந்து சேர்ந்த பின்னர் ஆலயத்தின் நுழைவுவாயில் கட்சித் தொண்டர்களுக்கும்,பக்தர்களுக்கும் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாஜ்.பா.கணேசன் அன்னதானம் வழங்கினார்.
No comments
Thank you for your comments