Breaking News

நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய சிட்கோ தொழிற்பேட்டை திறப்பு

காஞ்சிபுரம் :  

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் கிராமத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள  புதிய சிட்கோ தொழிற்பேட்டையை இன்று (25.03.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வையாவூர் கிராமத்தில் 42.06 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பேட்டை 42.06 ஏக்கரில் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 115 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இத்தொழிற்பேட்டை உருவாக்கத்தின் மூலம் சுமார் 1800 நபர்கள் நேரடியாகவும், 3000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு  பெறுவர்.  மேலும் தெருவிளக்கு, மழைநீர் வடிகால் வசதிகள் மற்றும் அனைத்து நவீன வசதிகளுடனும் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ள புதிய சிட்கோ தொழிற்பேட்டையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட புதிய சிட்கோ தொழிற்பேட்டையை வளாகத்தினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.

வையாவூர் கிராமத்தை சேர்ந்த  திரு.பாரி அவர்கள் “நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவிக்கையில்:

நான் வையாவூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று பணி புரிந்து வருகின்றனர். தற்போது எங்கள் கிராமத்தில் தொழிற்பேட்டை அமைய உள்ள காரணத்தினால் 1800 நபர்கள் நேரடியாகவும், 3000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு  கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

குறிப்பாக பெண்கள் பணிக்காக அதிக தூரம் செல்லாமல் எங்கள் கிராமத்திலேயே பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது மிகவும் சிறப்பு. இத்தகைய வாய்ப்பு அளித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வையாவூர் கிராமத்தின் சார்பாக எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன், சிட்கோ கிளை மேலாளர் (திருமுடிவாக்கம்) திருமதி.வைஜெயந்தி, சிட்கோ உதவி செயற்பொறியாளர் திரு. கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments