வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவு
காஞ்சிபுரம் :
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 329 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி IV தேர்வில் தேர்வாகி பணி நியமன ஆணை பெற்றவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவு பரிசு வழங்கி, கௌரவித்து, ஆப்தமித்ரா தன்னார்வலர் திட்டத்தின்கீழ் (பேரிடர் கால நண்பன்) தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் கர்நாடகா அரசின் சார்பில் Yuva Apdamithra ToT Training 21 நாள் ஒத்திகையுடன் கூடிய பயிற்சி முடித்து அதற்கான NDMA சான்றிதழ்யினை பெற்ற திரு.ரோ.முகேஷ்குமார் அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி, வாழ்த்து கூறினார்.
தொடர்ந்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலம் புதிய மின்னணு குடும்ப வேண்டி மனு அளித்த வாலாஜாபாத் வட்டம் வேடல் கிராமத்தை சேர்ந்த திருமதி. வெள்ளச்சி புதிய மின்னணு குடும்ப அட்டை நகல் வேண்டியும் மற்றும் புதிய மின்னணு குடும்ப அட்டை வேண்டி மனு அளித்த திருவங்கரணை கிராமத்தை சேர்ந்த திருநங்கை. சுரேகா அவர்களுக்கும், காஞ்சிபுரம் வட்டம் முத்துவேடு கிராமத்தை சேர்ந்த திருமதி.வே.சுந்தரி மற்றும் திருமதி.ம.காமாட்சி மற்றும் புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த திருமதி.ம.ராஜேஸ்வரி ஆகியோர்களுக்கும் மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
புதிய மின்னணு நகல் குடும்ப அட்டையை பெற்ற வாலாஜாபாத் வட்டம், வேடல் கிராமத்தை சேர்ந்த திருமதி.வெள்ளச்சி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் மூலம் நன்றியினை தெரிவிக்கையில்:
என் பெயர் வெள்ளச்சி, நான் வேடல் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட குடும்ப அட்டை தொலைந்து விட்டதால், மாதம் மாதம் நியாயவிலைக்கடையில் வாங்கும் பொருள்கள் எங்களால் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்தோம். நாங்கள் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று வருவதால், கடைகளில் அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்குவது சிரமமாக இருந்தது.
எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் புதிய மின்னணு நகல் குடும்ப அட்டை பெற மனு அளிக்கும்படி கூறியதால், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து, உடனடியாக என் மனுமீது நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நகல் மின்னணு குடும்ப அட்டை வழங்கினார்கள். மக்கள் நலனுக்காக நாங்கள் அளிக்கும் மனுமீது உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டு, மக்களின் குறைகளை தீர்க்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.ஆர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.சத்யா மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சி.பாலாஜி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments