Breaking News

மனித கழிவுகளை அகற்றும் தொழில் தடுப்பு & மறுவாழ்வு குழு – உறுப்பினர் தேர்விற்கான விண்ணப்பம் வரவேற்பு!

 காஞ்சிபுரம் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும்  அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை  வரவேற்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்  தகவல் தெரிவித்துள்ளதாவது,                

 அரசாணை நிலை எண்.66, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்.02.09.2024-இன்படி மூன்று வருடத்திற்கு ஒரு முறை இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013-ன்படி மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

 

காஞ்சிபுரம் மாவட்டம், இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும்  அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில் புதியதாக உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கு மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதை ஒழித்தல் குறித்த பொதுத்தொண்டில் ஆர்வம் உள்ள 4- உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 28.03.2025-க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,     

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்

  பழங்குடியினர் நல அலுவலகம்,

   மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

இரண்டாம் தளம், காஞ்சிபுரம்-631 501.

 

                                                                                                                                                                                                               

 

No comments

Thank you for your comments