Breaking News

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட செயலாளர் க.சுந்தர்

காஞ்சிபுரம், பிப்.28

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக வாலாஜாபாத் தெற்கொண்டு இளைஞர் அணி திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் பொதுக்கூட்டம் வாலாஜாபாத் அடுத்து திம்மராஜன்பேட்டையில் நடைபெற்றது நிகழ்வுக்கான வரவேற்பு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.சஞ்சய் காந்தி ,எஸ் எஸ் கே சத்யா அனைவரையும் வரவேற்றார் 


நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க. சுந்தர் ,தலைமை கழக பேச்சாளர் கத்தரி கரிகாலன் ,நாடாளுமன்ற உறுப்பினர்

சிறுவேடல் க. செல்வம் ,மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன் ,அப்துல் மாலிக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் 

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அரிசி புடவை வேஷ்டி உள்ளிட்ட இளைஞர் அணி சார்பில் மாவட்ட கழக செயலாளர் எம் எல் ஏ க.சுந்தர் வழங்கினர் .

மேலும் இந்நிகழ்வில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன் பேரூர் கழக செயலாளர் பாண்டியன்,நெசவாளரணி நிர்வாகி கணேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதரன்,பொதுக்குழு உறுப்பினர் எழிலரசி சுந்தரமூர்த்தி ஒன்றிய அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர் 

நிகழ்வுக்கான நன்றி உரையை தியாகராஜன் ஆற்றினார் நிகழ்ச்சிக்கான அனைத்தும் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமையில் நடைபெற்றது.

No comments

Thank you for your comments