காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம், பிப்.26:
அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சந்நிதி முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடைபெற்ற விழாவிற்கு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் இலவசமாக 60 பேருக்கு சைக்கிள்,30 பேருக்கு தையல் இயந்திரங்கள், ஒரு ஆட்டோ,ஒரு மாற்றுத்திறனாளிக்கான 3 சக்கரஸ்கூட்டர், ஒரு சலவைப்பெட்டி மற்றும் 100 பேருக்கு 5 கிலோ அரிசி உட்பட மொத்தம் 194 பேருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் மாவட்ட செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன் தெரிவித்தார்.
மாவட்டதுணைச் செயலாளர் போந்தூர், செந்தில்ராஜன்,ஒன்றிய செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம்,அத்திவாக்கம் ரமேஷ்,நகர் செயலாளர் பாலாஜி ஆகியோர் உட்பட நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments