காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ரதசப்தமி உற்சவம்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ரதசப்தமியையொட்டி செவ்வாய்க்கிவமை உற்சவர் வரதராஜர் காலையில் சூரியபிரபை வாகனத்திலும்,மாலையில் சந்திர பிரபை வாகனத்திலும் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் புகழ் பெற்றது காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில், இக்கோயிலில் தை மாத அமாவாசையை தொடர்ந்து வரும் சப்தமி திதியன்று ரதசப்தமி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டுக்கான ரதசப்தமி உற்சவத்தையொட்டி உற்சவர் வரதராஜ சுவாமி திருமலையிலிருந்து வாகன மண்டபத்துக்கு எழுந்தருளி அங்கிருந்து சூரியபிரபை வாகனத்தில் அலங்காரமாகி தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் மாடவீதிகளில் வீதியுலா வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெருமாள் ஆலயம் வந்து சேர்ந்ததும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் பெருமாள் சந்திரபிரபை அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆலயம் திரும்பியதும் தீபாராதனைகள் நடைபெற்று மீண்டும் திருமலைக்கு எழுந்தருளினார்.
No comments
Thank you for your comments