Breaking News

ரதசப்தமி:காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில் சூரியநமஸ்காரம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாச்சாரத்துறை சார்பில் ரத சப்தமியையொட்டி செவ்வாய்க் கிழமை சூரியநமஸ்காரம் நிகழ்ச்சி நடைபெற்றது.



காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ளது சந்திர சேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலாயா எனப்படும் சங்கரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.

இப்பல்கலையில் ரதசப்தமியையொட்டி சமஸ்கிருதம் மற்றும் இந்திய கலாச்சாரத்துறை சார்பில் சூரியநமஸ்காரம் நிகழ்ச்சி அத்துறையின் தலைவர் தேவஜோதி ஜனா தலைமையில் நடைபெற்றது.அவர் தனது தலைமையுரையில் சூரியநமஸ்காரம் செய்வதால் உடலும்,மனமும்,ஆன்மாவும் பயன் பெறுகிறது என்றார்.

நிகழ்வுக்கு கல்லூரியின் பேராசிரியர் ஆர்.நவீன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் துணைவேந்தர் சீனிவாசலு நிகழ்வைப் பார்வையிட்டதுடன் ஆரோக்கியத்துக்கும், ஆன்மீகத்துக்கும் வழிகாட்டியாக இருப்பது சூரிய நமஸ்காரம். யோகாவின் ஒரு பிரிவே சூரியநமஸ்காரம் என்றும் கூறி மாணவர்களை ஆசீர்வதித்தார்.

அதிகாலை நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவர்கள் சூரியநமஸ்காரம் செய்ததுடன் ஆதித்ய இருதயத்தையும் பாராயணம் செய்தனர்.

No comments

Thank you for your comments