Breaking News

தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி, காஞ்சிபுரம் சிறுவன் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை

 

காஞ்சிபுரம், பிப்.5:

தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் ஆத்விக் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தமைக்கு பலரும் புதன்கிழமை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


கடந்த ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1,2 ஆகிய 3 நாட்கள் மதுரையில் உள்ள சர்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 

இப்போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரம்,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.4 வயது முதல் 16 வயது வரையிலான பல்வேறு பிரிவுகள் வாரியாக தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாதெமியை சேர்ந்த மாணவர்கள் தலைமை பயிற்சியாளர் பாபு தலைமையில் பங்கேற்றிருந்தனர்.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சசி மற்றும் பிரியதர்ஷினி தம்பதியரின் மகனான ஆத்விக்(5)என்பவர் 5 வயதுக்கு உட்பட்டோருக்கான ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்றார்.

போட்டியில் வெற்றி பெற்ற பயிற்சி மேற்கொண்டிருந்த போதே திடீரென வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருப்பினும் தளராமல் இறுதிச்சுற்றில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இச்சிறுவன் ஆத்விக்கை பலரும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments