Breaking News

பாஜக சார்பில் 3-ம் ஆண்டு மோடி ரேக்ளா திருவிழா..!

கோவை வெள்ளலூர் இடையர்பாளையம் பைபாஸ் சாலை அருகில் பாஜக சார்பில் 3-ம் ஆண்டு மோடி ரேக்ளா திருவிழா எனும் தலைப்பில் ரேக்ளா பந்ததம் முன்னாள் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசுந்தராஜன், தெற்கு மாவட்ட தலைவர் சந்திர சேகர் ஆகியோர் ஏற்பாடு செய்து தலைமை வகித்தனர் இதில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் மாநில பொது செயலாளர் ஏபி.முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரேக்ளா பந்தயத்தை துவக்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராதிகா சரத்குமார் மோடி ரேக்ளா திருவிழாவில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.மக்கள் காளைகளை தெய்வமாக பார்க்கிறார்கள் என்றும், குழந்தைகளை போல வளர்த்து இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது தமிழக விளையாட்டுக்கு நாம் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும் என்றும், நான் உழவன் மகன் படத்தில் நடிக்கும் போது இதுபோன்ற ரேக்ளா பந்தயம் நடைபெற்றது, அப்பொழுது முதல் இப்போது வரை மக்கள் இதை ரசிக்கிறார்கள் என்பதே பெருமையாக உள்ளது, இளைஞர்கள் செல்போனில் மூழ்கிக்கிடக்காமல் இது போன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார் மேலும் இது போன்ற போட்டிகளை பிரதமரிடம் கூறினால் நிச்சயம் அவர் இதை கவனிப்பார் என்றார். பிரதமருக்கு தமிழக மக்கள் மீது அக்கறை கொண்டவர் என தெரிவித்தார். 

ஈ.சி.ஆரில் நடந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியம். இதற்கு காவல் துறையும் மாநில அரசும் செயல்பட்டு இதைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணி வழங்க வேண்டும் என கூறினார். மத்திய பட்ஜெட் குறித்தான கேள்விக்கு மிடில் கிளாஸ் மக்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒரு பட்ஜெட்டாக இருந்தது என தெரிவித்தார்.தமிழக அரசியல் களம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த ராதிகா, அரசியல் பேசுவதற்கு நிறைய நபர்கள் உள்ளார்கள் என்றும் நான் இங்கு ரேக்ளா பந்தயத்தை பார்க்கவே வந்து இருக்கிறேன்,இருந்தாலும் அவரவர்கள் அவர்களுடைய perspective கருத்துக் களை முன் வைக்கிறார்கள்.அது சரி தவறு என்று கூறுவதற்கு அனைவருக்குமே உரிமை உள்ளது என்றார். பெரியார் பற்றிய சர்ச்சைகள் செய்திகளை நானும் பார்த்தேன் என்றும், அது அவருடைய கருத்து அவர் என்றார். மக்களுக்கு நன்றாக தெரியும் எது சரி தவறு என்று. ஜல்லிக்கட்டு ரேக்ளா போன்றவைகளை தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்துகிறார்களே என்ற கேள்விக்கு, அது நல்ல விஷயம் தானே, அரசியல் கட்சிகள் எதற்காக இருக்கிறார்கள்? மக்களுக்காக இருக்கிறார்கள். இதுபோன்ற நல்லவைகளை எந்த கட்சி செய்தாலும் வரவேற்கலாம் என்றார்.



தமிழக வெற்றி கழகம் 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது குறித்த கேள்விக்கு விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். இந்நிகழ்வில் மேடையில் உரையாற்றிய அவர், கொங்கு நாட்டுக்கு இது ஒரு பெருமை எனவும், மதுரைக்கு எப்படி ஜல்லிக்கட்டு பெருமையோ இங்கு இந்த பெருமை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்த ஆண்டு ரேக்ளா பந்தயம் போட்டிக்கு பிரதமரை அழைத்து வருவதாக என்னிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இது போன்ற விளையாட்டுகளை நடத்தினால் ஒரு நல்ல விஷயம் என கூறினார்.2026 ஆம் ஆண்டு என்று கூறினாலே நாங்கள் அனைவரும் ரெடி. மக்களும் அதற்கு ரெடி அது எதற்கு என்று 2026 நாம் பார்க்கப் போகிறோம் என தெரிவித்தார்.

ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் ,தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்வில் மாநில ஊடகபிரிவு செயலாளர் பிரேம்குமார்,பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments