Breaking News

ஆசிய நகை கண்காட்சி 2025 ஆடம்பரமாக தொடங்கியது.!



கோவை பந்தய சாலையில் உள்ள விவாண்டா  ஹோட்டலில் பிப்ரவரி 7-8-9 வரை  தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நகை கண்காட்சி மற்றும் விற்பனையில் ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025,அதன் 52வது பதிப்பை துவங்கியுள்ளது.



தாஜ் விவாண்டாவில் 52வது பதிப்பு பிப்ரவரி 7-8-9 ஆகிய நாட்கள் வரை நடைபெற உள்ளது. கண்காட்சி மற்றும் விற்பனை நேரம் காலை10.30 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. மிகவும் பிரத்யேகமான, இந்த கண்காட்சியில் இந்தியா முழுவதிலுமிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட நகைக்கடைக்காரர்களின் சிறந்த நகை வடிவமைப்புகளை ஒரே கூரையின் கீழ் காண்பிக்கும். 



ஆசியா ஜூவல்ஸ் ஷோ 2025 இன் பிரமாண்டமான தொடக்க விழாவை வர்த்தக சபை மற்றும் தொழில்துறை தலைவர் ராஜேஷ் பி லுண்ட் (ஐ.சி.ஐ.சி.ஜ தலைவர்), சங்கீதா பீட்டர்-ஜூவல்லரி கியூரேட்டர், பி & எஸ் குழும நிறுவனங்களின் நிறுவனர் பிரியங்கா சுந்தர், ஹெல்த் பேசிக்ஸ் & கோவின் தலைமை நிர்வாக அதிகாரி  ஸ்வாதி ரோஹித், தாஜ் ஜிட்டோ பெண்கள் பிரிவுத் தலைவர் ரீனா கோத்தாரி, திருமதி உலக அழகி ரிங்கி ஷா மற்றும் பலர் குத்து விளக்கேற்றி கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

No comments

Thank you for your comments