Breaking News

சின்னக்காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நூற்றாண்டு விழா

காஞ்சிபுரம், பிப்.1:

சின்னக்காஞ்சிபுரம் பி.எம்.மிஸ்ரிலால் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி சனிக்கிழமை பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்னக்காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கோமதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.வெற்றிச் செல்வி வரவேற்று பேசினார். விழாவை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்தார்.விழாவில் பள்ளி மாணவியரின் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

விழாவில் பள்ளி மாணவியர், ஆசிரியர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments