நகர திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் பள்ளி மாணவனுக்கு மருத்துவ உதவி !
கோவை வடக்கு மாவட்டம் காரமடை நகர திமுக சார்பில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை தாங்கினார். நகர செயலாளர் இரா.வெங்கடேஷ் அனைவரையும் வரவேற்றார். மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தின் மூலம் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாக முகவர்கள் பணியாற்றும் விதம் திமுக அரசின் திட்டங்களை சாதனைகளாக எடுத்துக் கூறி செயல்படும் விதம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மேட்டுப்பாளையம் தொகுதி, ஒன்னிப்பாளையம் பகுதியை சார்ந்த சண்முகம் என்பவரின் மகன் 12ம் வகுப்பு படிக்கும் ஹேம்நாத் (வயது 14 ) என்ற சிறுவனுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் அவர்கள் மருத்துவ செலவிற்கு நிதி உதவியாக ரூபாய் 60 ஆயிரம் வழங்கினார். அருகில் நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ், திமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் சுற்றுச்சூழல் அணி து.தலைவர் கே.மனோகரன், மீனவர் அணி அமைப்பாளர் ராம் குட்டி, மாணவரணி அமைப்பாளர் அந்தோணிராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் ராஜேந்திரன், நெசவாளர் அணி தலைவர் கணேஷ்மூர்த்தி, நகர அவைத்தலைவர் ரவிகுமார், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பாக முகவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments