Breaking News

காஞ்சிபுரத்தில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற 3 பேர் கைது-ஒருவர் தலைமறைவு

காஞ்சிபுரம், பிப்.26:

காஞ்சிபுரம் அருகே பண்ருட்டி கிராமப் பகுதியில் பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றதாக 3 பேரை புதன்கிழமை காவல்துறையினர் கைது செய்திருப்பதுடன் வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே பண்ருட்டி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வருபவர் அருணா(22)இவர் திருச்சி மாவட்டம் சாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர் தங்கியிருக்கும் அறையிலிருந்து அருகில் உள்ள கடைக்கு முட்டை வாங்க சென்றுள்ளார்.

அப்போது 4 பேர் சேர்ந்து அருணாவை மானபங்கம் செய்ய முயன்றுள்ளனர்.இது குறித்து அருணா காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீஸôர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட குற்றச் செயலில் 4 பேர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பத்தை சேர்ந்த ரெங்கா(23)சந்திரசேகர்(22)சக்தி என்ற சதீஷ்குமார்(24)என்பதும் தெரிய வந்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 3 பேரில் ரெங்காவும், சக்தி என்ற சதீஷ்குமாரும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண்ணை மானபங்கம் செய்ய முயன்றவர்களில் மேலும் ஒருவரான வெங்கடேசனையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments