காஞ்சிபுரத்தில் ரௌடி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
காஞ்சிபுரம், பிப்.18:
காஞ்சிபுரம் அருகே தத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்(28)இவர் மீது கஞ்சா கடத்தியது உட்பட 15க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருந்து வருகிறது.
காவல்துறையினர் போக்கிரிப்பதிவேடு பராமரிக்கப்பட்டும் வந்த நிலையில் அவர் ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் போந்தூரை சேர்ந்த நரேஷ் என்பவரை இம்மாதம் 16 ஆம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் இவரை காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கே.சண்முகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனுக்கு பரிந்துரை செய்தார்.
அவரது பரிந்துரையை ஏற்று ஆட்சியர் அருணை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments
Thank you for your comments