Breaking News

காஞ்சிபுரத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 காஞ்சிபுரம்,பிப்.15:

ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை அலுவலகம் முன்பாக அனைத்து வங்கிப்பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



காஞ்சிபுரத்தில் அனைத்து வங்கிப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் ஸ்டேட் வங்கி பிரதானக் கிளை முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.உமாபதி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார்.

சங்க மாவட்ட தலைவர் வி.கிரிதரன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க காஞ்சிபுரம் மாநகர செயலாளர் ஆர்.சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 வங்கிகளில் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்திட போதுமான பணியாளர்களை நியமிக்க வேண்டும்,வாரத்தில் 5 நாட்கள் வேலை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் ஆகியனவற்றை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயலாளர் சூரி,கூட்டுறவு வங்கிகள் சங்க செயலாளர் சுப்பிரமணி,வங்கி ஊழியர் சம்மேளனத்தின் செயலாளர் வி.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உட்பட சங்க நிர்வாகிகள், வங்கி ஊழியர்கள்,அதிகாரகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments