காஞ்சிபுரத்தில் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைரநகைகள் திருடிய பெண் கைது
காஞ்சிபுரம்,பிப்.15:
காஞ்சிபுரம் நகைக்கடையில் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிய பெண்ணை சிவகாஞ்சி போலீஸôர் கைது செய்து அவரிடமிருந்த நகைகளையும் காவல்துறையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிர்வாகி சீனிவாசன்(35)சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அப் புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸôர் வழக்குப்பதிவு செய்து கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் ஒரு பெண் நகை வாங்குவது போல திருடுவது தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அவர் சின்னக்காஞ்சிபுரம் பல்லவர் மேடு ரவி மனைவி ரமாதேவி(48) என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் திருடியதாக 21,774 கிராம் எடையும் ரூ.2.5லட்சம் மதிப்பும் உடைய வைர வளையல்,மோதிரம் மற்றும் காதணி ஆகியனவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments
Thank you for your comments