அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோயில் தைப்பூசம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவ திருவிழா
கோவை மாவட்டம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிய திருக்கோவிலில் கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக முருகப் பெருமானுக்கு யாக சாலை பூஜை, அபிஷே கம் பூஜை, தீபாராதனை, ஆடு மயில் வாகனத்தில் திருவீதி உலா, குதிரை வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது இதற்காக பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள்,பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும், காவடி ஏந்தியும் பாத யாத்திரையாக முருகனை காண இரவில் மருதமலைக்கு வந்து குவிந்தனர்.
அதனை தொடர்ந்து மருதமலை அடி வாரத்தில் அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோயில் தைப்பூசம் மற்றும் திருக்கல்யாணம் உற்சவ திருவிழா வள்ளி யம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு என்கிற செந்தில் பிரபு தலைமை யில் வள்ளியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.
இந்த ஊர் வலத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் Er. R.சந்திரசேகர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கோவை மாநகராட்சி 38வது வார்டு மாமன்ற உறுப் பினர் சர்மிளா சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட சுமார் 1000 பக்தகோடி பெருமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
No comments
Thank you for your comments