வர்த்தக கண்காட்சியில் வாக்கரூவின் 1000 புதிய தயாரிப்புகள் அறிமுகம்
கோவை சக்தி சாலை சரவணம்பட்டி அருகில் உள்ள குளோபஸ் சென்டர் அரங்கில் வாக்கரு தனது புதிய தயாரிப்புகளை தமிழகத்திற்காக 1000க்கும் மேற்பட்ட புதிய காலணி மாடல்களை அறிமுக விழா நடைபெற்றது.
இது குறித்து வாக்கரூ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நௌஷாத் கூறுகையில், தமிழ்நாட்டில் எங்கள் பிராண்டிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தமிழக மக்களின் விருப்பத்திற்கேற்ப 1000 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கல்யாணி பிரியதர்ஷன் போன்ற இளம் நடிகைகள் எங்கள் பிராண்டின் விளம்பர தூதராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எங்கள் கூட்டணி, இன்றைய இளைஞர்களை ஸ்டைலிஷ் மற்றும் கம்ஃபர்டபிள் காலணிகள் மூலம் இன்னும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறோம். இன்றைய இளைஞர்களிடம் எளிதாகச் சென்றடையும் என்று தெரிவித்தார்.
இது குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கூறுகையில், வாக்கரூ இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பல்வேறு புதிய வகையான தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அழகுடன் கால்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காலணிகளை தயாரித்து வழங்குவதில் வாக்கரூ எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது, மேலும் தமிழக வாடிக்கையாளர்களுக்கு 1000ம் மேற்பட்ட இதன் புதிய தயாரிப்புகளை நான் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.
வாக்கரூவின் வித்தியாசமான வடிமைப்பு, ஸ்டைல், நவீன தொழில்நுட்பம் ஆகியவை, தமிழக வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வாக்கரு நிர்வாகிகள், வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments