காஞ்சிபுரத்தில் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு
காஞ்சிபுரம், பிப்.11:
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி கலையரங்கில் மாவட்ட தேசிய தகவல் மையம் சார்பில் இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்வில் தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்ட தேசிய தகவல் மையத்தின் உதவி அலுவலர் சரவணன் பல்வேறு தகவல் மையங்களிலிருந்து வரும் மோசடியான அலைப்புகளை தவிர்க்கும் விதங்கள், பாதுகாப்பாக நாம் வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்களை பிறருக்கு கொடுக்காமல் தவிர்த்தல் ஆகியன குறித்து மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரவீந்திரன்,தேசிய மாணவர் படை அலுவலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேசிய தகவல் மைய அலுவலர் பாலா நன்றி கூறினார்.
No comments
Thank you for your comments