Breaking News

சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி- காஞ்சிபுரம் மாணவர்கள் 17 பதக்கங்கள் பெற்று சாதனை

காஞ்சிபுரம், பிப்.11:

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர்கள் 8 தங்கம், 7 வெள்ளி, இரு வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.



புதுதில்லியில் கடந்த பிப்.1 முதல் 5 ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான கிக்பாக்ஸிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, இந்தியா, கஜகஸ்தான், பின்லாந்து,நேபாளம், இலங்கை உட்பட மொத்தம் 10 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றிருந்தன.

காஞ்சிபுரம் கிக்பாக்ஸிங் அசோசியேஷன் சார்பில் ஒன் மேன் மார்ஷியல் அகாதெமியை சேர்ந்த 9 பேர் பங்கேற்றனர்.இவர்களில் நீனா(21)என்ற மாணவி தங்கம்,வெள்ளி,வெண்கலம் ஆகிய மூன்றிலும் தலா ஒன்று வீதம் பதக்கங்கள் பெற்றார்.

இவரைத் தவரி சுகாஷ்(11) நித்திஷ்(14) ரோகினி(21) ஆகிய 3 பேரும் தலா ஒரு தங்கமும்,ஒரு வெள்ளிப்பதக்கமும் பெற்றுள்ளனர். 

வசீம்ரபீக்(17)இரு தங்கம்,பிரைசன்(16) ஒரு தங்கம்,ஷர்மா(14) ஒரு தங்கம், ஒரு வெள்ளி, தர்ஷன்(16) ஒரு வெள்ளிப்பதக்கம், நிகாத்தி(13)இரு வெள்ளிப்பதக்கம் பெற்றிருப்பது உட்பட மொத்தம் 8 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இத்தகவலை ஒன் மேன் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமியின் செயலாளர் அருண்,மற்றும் கணேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments