காஞ்சிபுரம் ருத்ரகோடீஸ்வரர் கோயிலில் உழவாரப்பணி
காஞ்சிபுரம், பிப்.23:
காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாக இருந்து வருவது பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள ருத்திரகோடீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.
இக்கோயில்களில் காஞ்சிபுரம் அப்பர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில் 20 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் இணைந்து ஆலயத்தை சுத்தம் செய்யும் உழவாரப்பணி மேற்கொண்டனர்.
இதனையடுத்து ருத்திர கோடீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
No comments
Thank you for your comments