Breaking News

காஞ்சிபுரம் வரதர் கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ.57.20 லட்சம்

காஞ்சிபுரம், பிப்.26:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.57,20,727 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.


அத்திவரதர் புகழ் பெற்றது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயில். இக்கோயிலில் இருந்த 11 உண்டியல்கள் கடந்த 19.9.2024 ஆம் தேதிக்குப் பிறகு புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டது. 

காஞ்சிபுரம் சரக அறநிலையத்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் உண்டியல்களை கோயில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் திறந்து எண்ணினார்கள்.இதில் ரொக்கமாக ரூ.57,20,727 இருந்தது.

தங்க நகைகள் 91,340 கிராமும், வெள்ளிப் பொருட்கள் 750 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இவை தவிர அமெரிக்கா, கனடா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 

உண்டியல் எண்ணும் பணியினை கோயில் செயல் அலுவலரும்,உதவி ஆணையருமான ராஜலட்சுமி,கோயில் மணியக்காரர் கிருஷ்ணகுமார் ஆகியோரும் மேற்பார்வை செய்தனர்.

No comments

Thank you for your comments