Breaking News

பட்டின மக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி – புரட்சி பாரதம் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம்  :

வேங்கைவயல் விவகாரம் உள்ளிட தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பட்டிலின மக்கள் மீது வன்கொடுமை, கொலை, கொள்ளைகள் நாள் தோறும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்,


இந்நிலையில் தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் பட்டியல மக்கள் மீது நடைபெறும் தாக்குதலை கண்டித்து தமிழக அரசு தலையிட்டு  பாதுகாப்பு வழங்க கோரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன 

அந்த வகையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே காஞ்சிபுரம் மாவட்ட புரட்சி பாரதம் கட்சி சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தனசேகரன் தலைமையில் மாநில செயலாளர் வழக்கறிஞர் பாரதிதாசன் கண்டன உரையாற்றினார் 


இதில் 100க்கு மேற்பட்ட புரட்சி பாரதம் கட்சியினர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் பரணி மாரி, காஞ்சி மேற்கு மாவட்ட பொருளாளர் அன்னக்கிளி, காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் தரணி, காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் தீனா, காஞ்சி மத்திய மாவட்ட பொருளாளர் முரளி, காஞ்சி தெற்கு மாவட்ட பொருளாளர் சந்திரன், காஞ்சி மாநகர செயலாளர் குட்டி என்கின்ற சத்தியசீலன், காஞ்சி ஒன்றிய செயலாளர் பவளரசன், வாலாஜாபாத் மேற்கொண்டிய செயலாளர் ரமேஷ், காஞ்சி தெற்கு ஒன்றிய செயலாளர் பிரபு உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்ட புரட்சி பாரதம் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments