சத்குருவிற்கு நன்றி தெரிவிக்க விழா எடுக்கும் கிராம மக்கள்!
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தொண்டாமுத்தூர் வட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆயிரக்கணக் கானோர் இணைந்து ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் விழாவை வரும் 5-ம் தேதி நடத்த உள்ளனர்.
கோவை மாவட்டம் மத்துவராயப்புரத்தில் நடைபெறும் இவ்விழாவில் தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வேலுமணி, திருமதி. வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். இது தொடர்பாக இவ்விழா ஒருங்கிணைப்பாளர் குமார் அவர்கள் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சத்குரு கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர் வட்டார மக்களின் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.அவருடைய ஈஷா அறக்கட்டளையின் மூலம் எங்களுடைய கிராம மக்களின் கல்வி, ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, விவசாயம், பொருளாதாரம் உள்ளிட்டவை நன்கு மேம்பட்டுள்ளது. தொண்டாமுத்தூர் வட்டாரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈஷாவைச் சார்ந்தே உள்ளது.அதற்காக, ‘சத்குருவின் குடும்பத் திருவிழா’ என்னும் ஒரு நிகழ்வை வரும் ஜனவரி 5-ம் தேதி கோவை மத்துவராயப்புரத்தில் உள்ள சக்திவேல் அண்ணா அவர்களின் தோட்டத்தில் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்களின் கீழ் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார். உடன் விழா குழுவினர் இருட்டுப்பள்ளம் கிட்டுசாமி, செம்மேடு வேலுமணி, முள்ளாங்காடு சசிகலா மற்றும் கோட்டைகாடு குழந்தைவேலு ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments