Breaking News

காஞ்சிபுரத்தில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கம்

காஞ்சிபுரம், ஜன.21:

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி கலையரங்கில் தொழில் நெறி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியன செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ரா.தேவேந்திரன் தலைமை வகித்தார். 

கல்லூரி முதல்வர் எம்.கோமதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.திலீப், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் சுபாஷ், புள்ளியியல் துறை துணை இயக்குநர் க.குப்புச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மு.நிர்மலாதேவி வரவேற்று பேசினார்.

உயர்கல்விக்கான போட்டித் தேர்வுகள் என்ற தலைப்பில் வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் சி.செந்தில்குமார், இந்திய ராணுவத்தில் அக்னிவீர் தீட்டத்தில் இணையும் விதம் என்ற தலைப்பில் கமாண்டிங் அதிகாரி ராகுல்குமார், மென்திறன் மேம்பாட்டு வாழ்வியல் கலைகள் என்ற தலைப்பில் ஆர்.சித்தேஷ்வரன், உளவியல் ரீதியான வாழ்க்கைக்கு வழிகாட்டல் என்ற தலைப்பில் இளம் தொழில் வல்லுநர் ஆர்.ராதிகா ஆகியோர் கருத்தரங்கில் பேசினார்கள். 

வேலைவாய்ப்புத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு காஞ்சிபுரம் ஆட்சியர்(பயிற்சி) ந.மிருணாளினி பரிசுகளை வழங்கி போட்டித் தேர்வில் வெற்றி பெறும் விதங்கள் குறித்து விளக்கினார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுக்காக பயிலும் மாணவியருக்கு பயிற்சிக் கையேடுகளும் வழங்கப்பட்டன. 

நிறைவாக பச்சையப்பன் கல்லூரி பணி நியமன அலுவலர் எஸ்.கலைச்செல்வி நன்றி கூறினார். 

முன்னதாக தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சியையும் ஆட்சியர்(பயிற்சி)ந.மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கருத்தரங்கில் இந்தியன் வங்கி சுய தொழில் பயிற்சி மைய இயக்குநர் உமாபதி,வங்கியின் நிதி ஆலோசகர் அரங்க மூர்த்தி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments