ஆவடி அருகே இரட்டை கொலை வழக்கில் அண்ணன், தம்பி சிறையில் அடைப்பு
பூந்தமல்லி :
ஆவடி அருகே ஆயில் சேரி கிராமம் பஜனைகள் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் இரட்டை மலை சீனிவாசன் ( வயது 30 ) இவரது தம்பி ஸ்டாலின் ( வயது 25) இவர்கள் இருவரையும் மர்மக் கும்பல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்தனர்.
இந்த கொலைப் பற்றி ஆவடி மற்றும் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆயில் சேரி மற்றும் சோராஞ்சேரியைச் சேர்ந்த பிரவீன் ( வயது 19) பாலாஜி (வயது 25) கார்த்திக் ( வயது 20 )நவீன்குமார் (வயது 25) மற்றும் சத்யா( வயது 20) ஆகிய 5 வாலிபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் முக்கிய கொலையாளிகளான சொக்கநல்லூர் ஊரைச் சேர்ந்த ஐயப்பன் (வயது 20) இவரது தம்பி முருகன் (வயது 19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
கொலை நடந்த அன்று ஆயில் சேரி வழியாக கொலையாளிகள் ஐயப்பன் மற்றும் முருகன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, கொலை செய்யப்பட்ட இரட்டை மலை சீனிவாசன் மற்றும் இவரது தம்பி ஸ்டாலின் ஆகிய இருவரும் தகராறில் ஈடுபட்டதால் கொலை சம்பவம் அரங்கேறியது தெரிய வந்தது.
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments
Thank you for your comments