காஞ்சிபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
காஞ்சிபுரம், டிச.26:
பெரிய காஞ்சிபுரம் ஒலிமுகம்மதுபேட்டை தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் காஞ்சிபுரம் கிளை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
கிளையின் மாணவரணி செயலாளர் சுபேதார் தலைமை வகித்தார். கிளை செயலாளர் யூசுப்,துணை செயலாளர்கள் ஆசிப் மற்றும் அப்துல்லாஹ், துணைத் தலைவர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிளை பொருளாளர் பாசில் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில மாணவரணி பேச்சாளர்கள் அப்துல் லத்தீப், உமர் பாரூக் ஆகியோர் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி, கல்வியின் முக்கியத்துவம், வேலைவாய்ப்புக்கான படிப்புகள் ஆகியன குறித்து விரிவாக விளக்கி கூறினார்கள்.
நிகழ்வில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments
Thank you for your comments